மாவட்ட செய்திகள்

அதிராம்பட்டினம் அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது + "||" + The tsunami rehearsal show was led by District Revenue Officer near Adirampattinam

அதிராம்பட்டினம் அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது

அதிராம்பட்டினம் அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது
அதிராம்பட்டினம் அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது.
அதிராம்பட்டினம்,


அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுனாமியின் போது கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மக்கள் மற்றும் ஆடு, மாடுகளை எப்படி காப்பாற்றுவது? என்பது பற்றியும், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்குவது பற்றியும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதில் மனிதர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை விளக்கி மருத்துவக்குழு மூலம் மருத்துவ முகாமும், ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவக்குழு மூலம் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் மகாலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், தாசில்தார் சாந்தகுமார், வருவாய் அதிகாரி முத்துலட்சுமி மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடலோர காவல் படை போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்
கரூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
2. திருச்சியில் வினோதம் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப கடன் வசதி
திருச்சியில் வாகனங்களுக்கு பெட்ரோல் - டீசல் நிரப்ப கடன் வழங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
3. பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பெண்களை கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்
இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் கூறினார்.
5. திருச்சியில் பல்வேறு இடங்களில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தல்
சர்வதேச யோகா தினத்தையொட்டி திருச்சியில் பல இடங்களில் நேற்று யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாணவ-மாணவிகள், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்று யோகாசனங்கள் செய்து அசத்தினர்.