மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை + "||" + The suicide of the young man drunk in poison

காஞ்சீபுரம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

காஞ்சீபுரம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை
காஞ்சீபுரத்தை அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஒழையூர் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருத்தை (வி‌ஷம்) குடித்தார்.

வெங்கடேசனை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கல்லூரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. திருநின்றவூரில் வேலை இழந்த விரக்தியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை
திருநின்றவூரில் வேலை இழந்த விரக்தியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கோவில்பட்டியில் பரிதாபம் தனியார் விடுதியில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவில்பட்டியில் தனியார் விடுதி அறையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. நம்பியூர் அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை: அரசு பள்ளிக்கூடம் முற்றுகை
நம்பியூர் அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால் அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டார்கள். ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5. சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது
சாத்தான்குளம் அருகே காதலிக்குமாறு தொந்தரவு செய்து கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.