மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை கோர்ட்டில் சோபியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் மனு + "||" + Bharatiya Janata Party (BJP) seeks action against Sophia in Mayiladuthurai court

மயிலாடுதுறை கோர்ட்டில் சோபியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் மனு

மயிலாடுதுறை கோர்ட்டில் சோபியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் மனு
பாரதீய ஜனதா கட்சியை அவமானப்படுத்திய சோபியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கோர்ட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
மயிலாடுதுறை,

கடந்த 3-ம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் மாநில டாக்டர் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கட்சி பணி தொடர்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தராஜன் இறங்கியபோது அவருக்கு பின்னால் வந்த தூத்துக்குடியை சேர்ந்தவரும், கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவருமான சோபியா, தமிழிசை சவுந்தரராஜனையும், பாரதீய ஜனதா கட்சியையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் “பாசிச பாரதீய ஜனதா ஒழிக“ என்று அநாகரிகமாக பேசியுள்ளார்். இந்த செய்கை குற்றமுறை நடவடிக்கையின்படி தண்டிக்கத்தக்க செயலாகும்.

எனவே இந்த புகாரினை ஏற்றுக்கொண்டு சோபியாவுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட இளம்பெண், கோர்ட்டில் ஆஜர்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட இளம்பெண் தஞ்சை கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவர், என்னை யாரும் கடத்தவில்லை என கூறினார்.
2. மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு
மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
3. இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பாளையம் கிராமத்தில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
4. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
முசிறி அருகே உள்ள கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
5. மக்கள் நீதி மய்யத்தினர் கலெக்டரிடம் மனு
மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட பொறுப்பாளருமான டி.ராஜசேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.