மாவட்ட செய்திகள்

மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள் + "||" + Fishermen who returned to the shore with disappointment because they did not get fish

மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள்

மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள்
கடல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக போதிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தாழங்குடா உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அதேபோல் கடந்த 2 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்கள் படகுகளை துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் போதிய அளவில் எங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்காததால் நாங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. புயலால் மீனவர்கள் பாதிப்பு: 1,500 பேருக்கு மானிய விலையில் படகுகள் வழங்க நடவடிக்கை
புயலால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் 1500 பேருக்கு மானிய விலையில் படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.
2. ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு
ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
3. மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை பணியில் சேர்வதற்கான பயிற்சி நிறைவு
தூத்துக்குடியில் மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பல்படை பணிகளில் சேர்வதற்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.
4. தனுஷ்கோடி கடல்பகுதியில் கரைவலையில் 3 டன் சூடை மீன்கள் பிடிபட்டன; மீனவர்கள் மகிழ்ச்சி
தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பில் 3 டன் சூடை மீன்கள் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
5. தரங்கம்பாடி பகுதியில் கனமழை: 18-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தரங்கம்பாடி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 18-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.