மாவட்ட செய்திகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் + "||" + The danger of collapse of ponds in the Pole Valley area

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கம்பம்,


லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரையிலான கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோகமும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பில் ஒரு போகமும் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக வீரப்பநாயக்கன்குளம், உடைப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டன. குறிப்பாக குளங்களின் கரைகள் அகலப்படுத்தும் பணி நடந்தது. கரையின் மேல்பகுதியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் செம்மண் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது.

இதன்எதிரொலியாக குளங்களின் கரையில் செம்மண் பரப்பும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது கரைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த கரைகள் வழியாக விளைநிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கால்நடைகளுக்கு தேவையான புல் கட்டுகளை வாகனங்களில் கொண்டு செல்வோரும் சிரமப்படுகின்றனர். வீரப்பநாயக்கன்குளத்தின் கரை வழியாக தான் கம்பத்தில் இருந்து நாராயணதேவன்பட்டி கிராம மக்கள் சென்று வருகிறார்கள். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குளங்களின் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மல்லிப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுமான பணிக்காக மூடப்பட்ட வடிகால்கள்: கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம்
மல்லிப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுமான பணிக்காக வடிகால்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2. நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் திருச்சிக்கு வெள்ள அபாயம் நீங்கியது
நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் திருச்சிக்கு வெள்ள அபாயம் நீங்கியது. கொள்ளிடம் இரும்பு பாலத்தில் மேலும் ஒரு தூண் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
3. தஞ்சையில் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டாலும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன
தஞ்சையில் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டாலும் குளங்கள் வறண்டு காணப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
4. கோட்டூர் அருகே குளங்கள் நிரம்பாததால் சாகுபடி பணிகள் பாதிப்பு - விவசாயிகள் கவலை
கோட்டூர் அருகே குளங்கள் நிரம்பாததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5. ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தர்மபுரி கலெக்டர் உத்தரவு
காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.