மாவட்ட செய்திகள்

மதசார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு + "||" + It is time for the secularists to join

மதசார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

மதசார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
மதச்சார்பற்றவர்கள் ஒன்றுசேரம் நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

புதுச்சேரி,

விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாரை படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள இந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுதேசி மில் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், செல்வ.நந்தன், பொன்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஓய்வெடுப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

நாட்டை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அடக்குமுறையை கையாண்டு வருகிறது. தங்களுக்கு எதிராக யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று நினைக்கிறது. இதற்காக எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனைவாதிகளை மிரட்டி வருகிறது.

அவர்களை எதிர்த்து கருத்து சொல்லக்கூடாது என்றால் இது என்ன சர்வாதிகார நாடா? இந்திய ஒரு ஜனநாயக நாடு. சமீபத்தில் கூட சோபியா என்ற மாணவி பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டார் என்பதற்காக அவரை கைது செய்தார்கள்.

எழுத்தாளர் ரவிக்குமாருக்கு புதுவை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவருக்கு பின்னால் நிறைய பேர் உள்ளனர். மதவாதிகளுக்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - முதல்–அமைச்சர் நாராயணசாமி பேட்டி
வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. கஜா புயலால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4100 நிவாரணம் - நாராயணசாமி அறிவிப்பு
கஜா புயலால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 100 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
3. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி முடிவடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
4. அங்கன்வாடி காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கந்தசாமி உறுதி
காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
5. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை மாற்றிட வேண்டும் அமைச்சர் அறிவுரை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை மாற்றிட அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அறிவுரை வழங்கினார்.