மாவட்ட செய்திகள்

ராமநாதபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு + "||" + The government bus ran into Ramanathapuram in disarray

ராமநாதபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு

ராமநாதபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் நேற்று தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பஸ்சை பயணிகள் சிறைபிடித்ததால், டிரைவர் தப்பியோடினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் இடைநில்லா பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக ராமரும், டிரைவராக இளங்கோ என்பவரும் வந்தனர். பஸ்சில் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பியதும், அந்த வழியாக சென்ற கார் மீது மோதுவது போல் பஸ் சென்றதால் பயணிகள் திடுக்கிட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பஸ் ரோமன் சர்ச் பகுதியில் சென்றபோது மற்றொரு கார் மீது உரசியபடி சென்றது. அப்போது அந்த காரின் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து தப்பிய நிலையில் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக பஸ் சென்றனர். இதனால் அந்த பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினர்

பயோனியர் ஆஸ்பத்திரி அருகில் பஸ்சை நிறுத்தியலும், அதில் வந்த பஸ் டிரைவர் இளங்கோ அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் பணிமனை கிளை மேலாளர் பத்மகுமார் விசாரணை நடத்தினார். அவரிடம் பயணிகள் டிரைவர் மது அருந்திவிட்டு பஸ்சை ஓட்டி வந்ததாக குற்றம்சாட்டினர்.

அப்போது கிளை மேலாளர் பத்மகுமார், புதிய பஸ்சாக இருப்பதால் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பணி ஒதுக்கீட்டின் போது டிரைவர் நல்ல நிலையில் இருந்ததால் பஸ் இயக்க அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறுதியுடன் கூறினார். இருப்பினும், டிரைவர் இளங்கோவை நேரில் வரச்சொல்லி உள்ளதாகவும், விசாரித்து தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் மது அருந்தாவிட்டால் பஸ்சை நிறுத்தியதும் டிரைவர் இளங்கோ தப்பி ஓடியது ஏன் என்று பயணிகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்களில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
நெல்லிக்குப்பம் அருகே பஸ் மீது கல்வீசி கண்ணாடியை மர்ம மனிதர்கள் உடைத்தனர். இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
3. உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கியதால் விவசாயிகள் மீண்டும் முற்றுகை –பரபரப்பு
கிணத்துக்கடவு அருகே உள்ள பெரும்பதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கியதால் மீண்டும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
4. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் 300 மரங்களை தீ வைத்து எரித்த மர்ம ஆசாமிகள் அதிர்ச்சியில் பேராசிரியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இருந்த சுமார் 300 மரங்களை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.