மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் இரவில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு + "||" + Petrol bombing at home in the night in Erode

ஈரோட்டில் இரவில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஈரோட்டில் இரவில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஈரோட்டில், இரவில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில்வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். ஈரோடு கொங்கலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளார்.

இவருடைய வீட்டின் கீழ் தளத்தில் உள்ள 4 குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. முதல் தளத்தில் செல்வம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு செல்வம், அவருடைய மனைவி, மகன், மகள் ஆகியோர் மளிகைக்கடைக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிஅளவில் முனியப்பன் கோவில் வீதிக்கு வந்த மர்மநபர்கள் திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். அது செல்வம் வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் விழுந்து வெடித்தது. ஆனால் அங்கு எந்த பொருட்களும் இல்லாததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தீ எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக செல்வத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? அவர்கள் எதற்காக பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்? தொழில் போட்டி காரணமாக சம்பவம் நடந்ததா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. காய்களை பழுக்க வைக்க வாழைத்தார்களில் ரசாயனம் அடிக்கப்படுகிறதா? செல்போன்களில் பரவும் வீடியோ படத்தால் பரபரப்பு
ஈரோட்டில் வாழை காய்களை பழுக்க வைக்க வாழைத்தார்களில் ரசாயனம் அடிப்பதாக செல்போன்களில் பரவும் வீடியோ படத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
2. குப்பை கிடங்கில் ரசாயன புகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள் முகநூலில் தகவல் பரவியதால் பரபரப்பு
கீழக்கரை குப்பை கிடங்கில் ரசாயன புகை என்று முகநூலில் தகவல் பரவியதால், நகராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.
3. பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு– பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவு
இளம்பெண் பாலியல் பாலத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு, பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
4. திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் திடுக்கடும் தகவல்கள்
திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
5. என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி “தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்”
“என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.