மாவட்ட செய்திகள்

அரியலூர்–பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் + "||" + Details of tomorrow mother camps in Ariyalur-Perambalur districts

அரியலூர்–பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்

அரியலூர்–பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்
அரியலூர், உடையார்பாளையம் ஆகிய தாலுகாவில் 2 கிராமத்திலும், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய தாலுகாவில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம்கள் நாளை அந்தந்த தாலுகாவின் தாசில்தார்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய தாலுகாவில் 2 கிராமத்திலும், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய தாலுகாவில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம்கள் நாளை (வெள்ளிக்கிழமை) அந்தந்த தாலுகாவின் தாசில்தார்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:– அரியலூர் தாலுகாவில் அமீனாபாத், அன்னிமங்கலம் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் தாலுகாவில் பருக்கல் (மேற்கு), ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களிலும், செந்துறை தாலுகாவில் இரும்புலிக்குறிச்சி கிராமத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் ஆத்துக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.

இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகாவில் அரணாரை (வடக்கு), வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந்துறை (மேற்கு), குன்னம் தாலுகாவில் அத்தியூர் (வடக்கு) மற்றும் ஆலத்தூர் தாலுகாவில் து.களத்தூர் ஆகிய 4 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயன்பெறலாம்.

இந்த தகவலை அரியலூர்–பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் விருப்பமுள்ளவர்கள் அம்மா இரு சக்கர வாகனம் பெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
3. நடிகர் திலீப், மோகன்லாலிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் - நடிகர் சித்திக்
நடிகர் திலீப், மோகன்லாலிடம் கடந்த 10-ந் தேதியே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் என அம்மா சங்க செயலாளர் நடிகர் சித்திக் கூறி உள்ளார்.
4. காவிரி ஆற்றின் அருகே உள்ள அம்மா பூங்கா விரிவுபடுத்தப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மாயனூர் காவிரி ஆற்றின் அருகே உள்ள அம்மா பூங்கா விரிவுபடுத்தப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.
5. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றிபெறும் தங்கதமிழ்செல்வன் பேச்சு
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.