மாவட்ட செய்திகள்

காங்.-ஜனதாதளம் (எஸ்) தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜனதா முயற்சி - குமாரசாமி குற்றச்சாட்டு; எடியூரப்பா மறுப்பு + "||" + BJP's attempt to ease the Congress-Janata Dal (S) leaders - Kumaraswamy's allegation; Denyappa denial

காங்.-ஜனதாதளம் (எஸ்) தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜனதா முயற்சி - குமாரசாமி குற்றச்சாட்டு; எடியூரப்பா மறுப்பு

காங்.-ஜனதாதளம் (எஸ்) தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜனதா முயற்சி - குமாரசாமி குற்றச்சாட்டு; எடியூரப்பா மறுப்பு
வருமானவரி, அமலாக் கத்துறை மூலம் காங்.-ஜனதாதளம் (எஸ்) தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதனை எடியூரப்பா மறுத்துள்ளார்.
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறும் போது, கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா முயற்சித்து வருகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்படி வருமான வரித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணாவை சந்தித்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா பேசியுள்ளாா, என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்படி வருமான வரித்துறை இயக்குனரை விஜயேந்திரா சந்தித்து பேசவில்லை. குமாரசாமி தற்போது முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். முதல்-மந்திரி பதவியில் இருக்கும் குமாரசாமி பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. ஆதாரம் இல்லாமல் எந்தவொரு குற்றச்சாட்டையும் கூறக்கூடாது.

நான் என் மீதுள்ள வழக்குகள் தொடர்பான பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுக்கு சென்று வருகிறேன். இந்த சூழ்நிலையில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நான் நினைப்பதாக குமாசராமி கூறுவது தவறானது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என் வசம் இல்லை. நானோ, விஜயேந்திராேவா சொன்னால் அதிகாரிகள் கேட்பார்களா?, இதையெல்லாமல் அறிந்து முதல்-மந்திரியான குமாரசாமி பேச வேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதுகுறித்து விஜயேந்திரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "முதல்-மந்திரி குமாரசாமி மீது எனக்கு கவுரவம் இருக்கிறது. வருமான வரித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணா வை நான் சந்தித்து பேசவில்லை. நான் அதிகாரி பாலகிருஷ்ணாவை சந்தித்ததாக குமாரசாமி கூறுவது உண்மையல்ல.

மாநி லத்தில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. உளவுப் பிரிவு அரசிடம் தான் இருக்கிறது. எடியூரப்பா மகன்கள் எங்கு செல்கிறார்கள்? என்று முதல்-மந்திரி குமார சாமியால் கண்காணிக்க முடியாதா?. எனவே முதல்-மந்திரி குமாரசாமி தவறான குற்றச் சாட்டுகளை கூறக் கூடாது," என்றார்.