மாவட்ட செய்திகள்

ராயக்கோட்டை அருகே காட்டில் தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை + "||" + Who is dead in the forest near Raikkottai? Police investigation

ராயக்கோட்டை அருகே காட்டில் தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

ராயக்கோட்டை அருகே காட்டில் தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
ராயக்கோட்டை அருகே காட்டில், தூக்கில் வாலிபர் பிணம் தொங்கியது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ளது கொத்தப்பள்ளி. இதன் அருகில் உள்ள சானமாவு காப்புக்காட்டில் ஒரு ஆலமரத்தில் வாலிபர் பிணம் தூக்கில் தொங்கியது. அவருக்கு 25 வயது இருக்கும் என தெரிகிறது.

அவர் இறந்து 20 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சிவப்பு நிற முழுக்கை சட்டையும், பச்சை நிற கால்சட்டை மற்றும் பனியன் அணிந்திருந்தார்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி சானமாவு கிராம நிர்வாக அலுவலர் மகபூப்ஜான் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
2. பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி சாவு விசாரணை நடத்துமாறு போலீசில் மனைவி புகார்
பல்லடம் அருகே வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பனியன் நிறுவன தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் அவருடைய மனைவி புகார் செய்துள்ளார்.
3. கோட்டக்குப்பத்தில் குப்பை மேட்டில் பெண் பிணம்; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
கோட்டக்குப்பத்தில் குப்பைமேட்டில் உடலில் காயங்களுடன் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
4. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தென்தாமரைகுளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை
திருவாரூரில் தவிடு வியாபாரியின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.