மாவட்ட செய்திகள்

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல் + "||" + Gudka is scared of corruption Minister vijayabhaskar should resign Vaiko emphasis

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல்

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல்
குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை,

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பதவி விலக வேண்டும்

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

தமிழக அரசு ஊழலின் உச்சத்தில் உள்ளது என்பதை சி.பி.ஐ. சோதனை மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. குட்கா ஊழல் விவகாரத்தில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பணியில் இருக்கும் போலீஸ் டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும். இல்லை என்றால் தமிழக அரசு 2 பேரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு காவிரி பாசன பகுதிகளை பாலைவனமாக்க முயற்சி செய்கிறது. தமிழகத்தில் இயற்கை வளங்களை அழிக்க கூடிய நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான அரசு, மத்திய அரசு என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவி சோபியா

மத்திய அரசு தூண்டுதலின் பேரில் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் இந்த விளையாட்டால் மாணவியின் வாழ்க்கை பாழாகும் வாய்ப்பு உண்டு. எனவே மாணவி சோபியா மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் அமைச்சர் பாஸ்கரன் வேண்டுகோள்
நவீன தொழில் நுட்பக்கருவிகளை பயன்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
2. இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் வைகோ பேச்சு
இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வைகோ பேசினார்.
3. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கவர்னர் மாற்றப்படுவார். மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்களின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை தெரிவித்தார்.
4. அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனுக்கும் முதல்–அமைச்சர் ஆகும் தகுதி உண்டு எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனுக்கும் முதல்–அமைச்சர் ஆகும் தகுதி உண்டு என்று திருக்கோவிலூர் அருகே நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.
5. வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் அரசுக்கு அமைச்சர் கோரிக்கை
திருப்புவனம்–மானாமதுரை வைகை பூர்வீக 2–ம் பகுதி பாசன விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசுக்கு, அமைச்சர் பாஸ்கரன் கோரிக்கைவிடுத்தார்.