மாவட்ட செய்திகள்

அவதூறாக பேசிய நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு + "||" + Speaking at the scandal, the actor should take action on the allegation of the petition at the Superintendent's Office

அவதூறாக பேசிய நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

அவதூறாக பேசிய நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர்.
நாகர்கோவில்,

பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சினிமா நடிகர் விசு சமீபத்தில் காணொலியில் பேசும் போது என்னை பற்றி மிகவும் அவதூறாக பேசியிருந்தார். எனவே என் பெயரை குறிப்பிட்டு பேசும் பகுதிகளை நீக்க வேண்டும் என்று முகநூல் வழியாக நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் என் கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து நடிகர் விசு மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன். புகார் அளித்த பிறகும் விசு என்னை விமர்சித்து பேசியுள்ளார். என் மீது அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இப்படிப்பட்ட தொடர் பேச்சுகளால் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பெரும் இடையூறுகளும், ஆபத்துகளும் எழுகின்றன. எனவே நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு
மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
2. இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பாளையம் கிராமத்தில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
3. விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு
விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.
4. இருளர் காலனி மக்களுக்கு பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது பீர்ஜேப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
5. கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா தலைவர்கள் மனு
சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மக்கள் போராட அழைப்பு விடுத்த முதல்–மந்திரி குமாரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா தலைவர்கள் மனு கொடுத்து உள்ளனர்.