மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது + "||" + Suspicion in conduct: Worker arrested by his wife

நடத்தையில் சந்தேகம்: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

நடத்தையில் சந்தேகம்: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
கள்ளக்குறிச்சியில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரை தாக்கிய கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்தியமூர்த்தி(வயது 30) தொழிலாளி. இவருக்கும் பாரதி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தை மீது சத்தியமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட பாரதி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த சத்தியமூர்த்திக்கும், பாரதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, தனது மனைவியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2. பெரியபாளையம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பெண்கள் கைது
பெரியபாளையம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3. கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதம்
கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதம் அடைந்தது.
4. பிரதமர் மோடியை சந்திக்க முடியாத வருத்தத்தில் பேருந்து மீது தீ வைத்த பெண் கைது
உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முடியாத வருத்தத்தில் பெண் ஒருவர் பயணிகள் பேருந்து மீது தீ வைத்துள்ளார்.
5. மற்ற ஆண்களுடன் பேசியதில் ஆத்திரம்; நடன அழகி மீது ஆசிட் வீசிய காதலர் கைது
மத்திய பிரதேசத்தில் மற்ற ஆண்களுடன் பேசிய ஆத்திரத்தில் நடன அழகி மீது ஆசிட் வீசிய காதலர் கைது செய்யப்பட்டார்.