மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதல்; 15 பேர் படுகாயம் + "||" + The bus collision near Kancheepuram 15 people were injured

காஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதல்; 15 பேர் படுகாயம்

காஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதல்; 15 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் இருந்து ஒரு தனியார் பஸ் ஆற்காட்டிற்கு சென்று கொண்டிருந்தது. இதேபோல் வேலூரில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் காஞ்சீபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் ஏரிக்கரை அருகே வரும்போது 2 பஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன.

இதில், 2 பஸ்களில் இருந்த 5 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.