மாவட்ட செய்திகள்

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near the vertical Husband and wife Sleeping suicide

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதா(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 7 வயதில் லோகிதா என்ற மகள் இருக்கிறாள். அவள், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சுரேசுக்கும், சுதாவுக்கும் முன்கோபம் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என தெரிகிறது. சுரேஷூக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுரேஷ், குடிபோதையில் வீட்டுக்கு சென்றார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்த சுரேஷ், தனது மனைவி தூக்கில் தொங்கிய அதே கயிற்றின் மறுமுனையில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் அவர்களுடைய மகள், வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

நேற்று காலை 9 மணி வரை சுதா வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் கதவை திறந்து வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவேற்காட்டில் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
2. கடலூர் அருகே விபத்து: டிப்பர் லாரி மோதி கணவன், மனைவி பலி
கடலூர் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்கள். துக்க நிகழ்ச்சிக்கு வந்து திரும்பிய போது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
3. மதுரவாயலில் நடிகரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
மதுரவாயலில் நடிகரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. காஷ்மீரில் போலீசார் செய்யும் தியாகங்கள்; உருக்கமுடன் எழுதிய காவல் அதிகாரியின் மனைவி
காஷ்மீரில் பணியில் உள்ள போலீசார் செய்யும் தியாகங்களை பற்றி இணையதளத்தில் காவல் அதிகாரியின் மனைவி உருக்கமுடன் எழுதியுள்ளார்.
5. கேரளாவில் குடும்ப சண்டையால் மனைவியை கொன்று எரித்த 91 வயது முதியவர்
கேரளாவின் திருச்சூரில் வசித்து வந்த 91 வயது முதியவர் குடும்ப சண்டையால் 87 வயது மனைவியை கொன்று எரித்துள்ளார்.