மாவட்ட செய்திகள்

மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + 12 thousand liquor bottles breaking the luggage of the luggage

மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மன்னார்குடி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையில் மன்னார்குடியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரும், விற்பனையாளரும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

மறுநாள் காலை கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது கடையில் இருந்த மதுபாட்டில்களை காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார், மதுக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 60 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மதுக்கடையின் மேற்பார்வையாளர் அசோக்குமார் பரவாக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை அடகு கடையில் 12 கிலோ தங்க நகைகள், ரூ.9 லட்சம் கொள்ளை வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா? 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
மதுரை நகை அடகுக் கடையில் 12 கிலோ தங்க நகைகள், ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா என்று போலீசார் 4 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
2. முன்விரோதத்தில் பெண், அரிவாளால் வெட்டிக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
3. மதுரையில் அடகுக் கடையை உடைத்து துணிகரம்: 11¼ கிலோ தங்க நகைகள் கொள்ளை
மதுரையில் அடகுக் கடையை உடைத்து 11¼ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
4. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் ஆர்.சி. புக் திருப்பி தராததால் தகராறு ஏற்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற கணவன்-மனைவியை வழிமறித்து கத்தியால் குத்தினர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. பெருந்துறை அருகே பரபரப்பு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி வாலிபர் கைது
பெருந்துறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...