மாவட்ட செய்திகள்

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது + "||" + Five arrested, including two women who sold liquor in Kilaveloorur area

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கீழ்வேளூரை அடுத்த விக்னாபுரம், புதுச்சேரி சுடுகாட்டு பகுதி, கீழ்வேளூர் அருகே உள்ள எறும்புகண்ணி கிராமம், காக்கழனி தோப்புத் தெரு, காக்கழனி ஆகிய பகுதிகளில் சாராயம் விற்ற ரகுமான் (வயது 30), தங்கையன் (48), தமிழ்குடிமகன் (28), வசந்தி (35), பிருந்தா (25) ஆகிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்கள் 5 பேர் மீதும் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 550 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
தஞ்சை அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
2. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் - த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோபியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
3. திருக்கடையூரில் எச்.ராஜா உருவ படத்தை எரிக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 27 பேர் கைது
திருக்கடையூரில், எச்.ராஜாவின் உருவ படத்தை எரிக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. தஞ்சையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
தஞ்சையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. இரவு விருந்தில் கூச்சல் போட்டு இடையூறு: தட்டி கேட்ட பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் தொந்தரவு; 5 பேர் கைது
அரியானாவில் இரவு விருந்தில் சத்தம் போட்டு இடையூறு செய்தவர்களை தட்டி கேட்ட பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் தொந்தரவு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.