மாவட்ட செய்திகள்

பிரதமரின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க நவம்பர் 15-ந்தேதி கடைசி நாள் + "||" + The last day of November 15 to apply for the Prime Minister's scholarship

பிரதமரின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க நவம்பர் 15-ந்தேதி கடைசி நாள்

பிரதமரின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க நவம்பர் 15-ந்தேதி கடைசி நாள்
முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் பிரதமரின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாளாகும். இது தொடர்பாக கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர், 


மருத்துவம், தொழிற்கல்வி, மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளில் சேர்க்கை பெற்ற முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை பெற பிளஸ்-2 மற்றும் முதுகலை பட்டத்துக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். மேலும் 2018-19-ம் கல்வி ஆண்டில் சேர்க்கைப்பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

பிரதமரின் கல்வி உதவித்தொகையை பெற www.ksb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் உரிய ஆவணங்களை சரிபார்த்தலுக்காக முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண் டும். விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 15.11.2018 அன்று கடைசிநாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-294732 என்ற டெலிபோன் எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணி கலெக்டர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு
விருத்தாசலத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளின் தாய், விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கணவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் வேலை கிடைக்காத விரக்தியில் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் பரிசு வழங்கினார்.
4. வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
கடலூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.
5. கடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் திடீர் ஆய்வு
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழாயில் கலங்கலாக வந்த தண்ணீரை கைகளில் பிடித்து குடித்து பார்த்தார்.