மாவட்ட செய்திகள்

மாதேப்பட்டி மூங்கில் புதூரில் நெல் சாகுபடியை ஆய்வு செய்த கலெக்டர் + "||" + Collectorate studying rice cultivation in Mettupettai Bamboo Puthur

மாதேப்பட்டி மூங்கில் புதூரில் நெல் சாகுபடியை ஆய்வு செய்த கலெக்டர்

மாதேப்பட்டி மூங்கில் புதூரில் நெல் சாகுபடியை ஆய்வு செய்த கலெக்டர்
மாதேப்பட்டி மூங்கில்புதூரில் நெல் சாகுபடி பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் மாதேப்பட்டி மூங்கில்புதூர் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி பணிகளை கலெக்டர் டாக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையில் மொத்தம் 55 ஆயிரத்து 638 ஹெக்டேர் பரப்பளவில் சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணை வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளது. வேளாண்மை துறை சார்பாக எந்திர நாற்று நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடிக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கங்கலேரி, மரிக்கம்பட்டி, செம்படமுத்தூர் மற்றும் கூலியாளம் கிராமங்களுக்குட்பட்ட 1,000 ஏக்கர் நில பரப்பளவில் திருந்தி நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறை வேளாண்மை தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அசோலாவை பயன்படுத்துவதன் மூலம் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் தழை சத்தான யூரியா பயன்பாடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அசாடிலாக்டின் எனும் தாவர பூச்சிக்கொல்லி இயற்கை மருந்தினை பயன்படுத்தி நன்மை செய்யும் பூச்சிகள் காக்கப்பட்டு, தீமை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுகிறது. இதனால் 20 சதவீதம் விளைச்சல் கூடுதலாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன் விஜயகுமார், வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையப்பன், வேளாண்மை அலுவலர் அருள்தாஸ், தோட்டக்கலை அலுவலர் வானிலைஅரசு மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு
கன்னியாகுமரியில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. ‘பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்’ பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பேராவூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
3. பழனி முருகன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
பழனி முருகன் கோவிலில் நேற்று நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
4. நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
5. சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது - கலெக்டர் ஜெயகாந்தன் பேச்சு
கிராமப் பகுதியில் உள்ள சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.