மாவட்ட செய்திகள்

ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு + "||" + Road traffic impacts with women hailing from Athur in drinking water

ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆத்தூர்,

ஆத்தூர் நகராட்சி 31-வது வார்டு வ.உ.சி. நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், நேற்று காலை மிக குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சேலம் - கடலூர் ரோடு கிரைன் பஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் நகராட்சி பணி மேற்பார்வையாளர் தேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது மாலையில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
2. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பொள்ளாச்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.
4. சொத்து பிரச்சினையில் விபரீதம் மகனிடம் இருந்து விஷத்தை பறித்து குடித்த விவசாயி சாவு உறவினர்கள் சாலை மறியல்
சொத்து பிரச்சினையில் தாக்கியதால் அவமானம் அடைந்து விஷம் குடிக்க முயன்ற மகனிடம் இருந்து பறித்த விஷத்தை குடித்த விவசாயி உயிரிழந்தார்.
5. திருக்கடையூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
திருக்கடையூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.