மாவட்ட செய்திகள்

ஓட்டல் அதிபர் கொலை வழக்கு: கூலிப்படை கும்பல் தலைவன் உள்பட 5 பேர் கைது + "||" + Police murder case: Five men, including mercenary gang leader, arrested

ஓட்டல் அதிபர் கொலை வழக்கு: கூலிப்படை கும்பல் தலைவன் உள்பட 5 பேர் கைது

ஓட்டல் அதிபர் கொலை வழக்கு: கூலிப்படை கும்பல் தலைவன் உள்பட 5 பேர் கைது
சேலம் ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் கூலிப்படை கும்பல் தலைவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி(வயது 49). இவர் வீட்டின் கீழ்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். பின்னர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள காவிரி ஆற்றில் கோபி பிணமாக மீட்கப்பட்டார். மேலும் அவர் மாயமான நாளில் அவருடைய நண்பர் பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த திருமணிகண்டன்(36) என்பவரையும் காணவில்லை. அவர் பிடிபட்டால் தான் கோபி கொலைக்கான காரணங்கள் தெரியவரும் என்பதால், அவரை அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் டவுன் வருவாய் ஆய்வாளரிடம் திருமணிகண்டன் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோபி, திருமணிகண்டன், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கட்டிட என்ஜினீயர் வினோத்குமார் (33) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். கோபியின் மனைவியுடன் வினோத்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2013-ம் ஆண்டு அவரை கோபி, திருமணிகண்டன் ஆகியோர் கூலிப்படைக்கு ரூ.3 லட்சம் கொடுத்து கொலை செய்தனர்.

இந்த கொலையில் கூலிப்படை தலைவனான பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் உள்பட சிலர் ஈடுபட்டனர். இந்த நிலையில் சதீஷ்குமார், கோபியிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கி கொடுக்குமாறு திருமணிகண்டனிடம் கூறினார். இல்லையெனில் வினோத்குமார் கொலை தொடர்பாக போலீசாரிடம் தெரிவித்து உங்களை காட்டி கொடுத்து விடுவேன் என்று கூறி அவர் மிரட்டினார்.

இதையடுத்து திருமணிகண்டன் ஓட்டல் அதிபர் கோபியிடம் பணம் கேட்டார். இந்த பணத்தை அவர் கொடுக்காததால், அவரை திருமணிகண்டன், ஏழுமலை ஆகியோர் சேர்ந்து கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொன்றனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருமணிகண்டன், ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் நேற்று இரவு கூலிப்படை கும்பல் தலைவன் சதீஷ்குமார்(35), கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்(30), பூபாலன்(35), மணிகண்டன்(23), தங்கராஜ்(28) ஆகிய 5 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்தார். இந்த கும்பலுக்கு வேறு கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் பயங்கரம்: கலப்பு திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை
நாகர்கோவிலில் கலப்பு திருமணம் செய்த வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. காந்தி சிலை முன் போலீஸ் ஏட்டு மகன் தர்ணா; படத்துடன் அமர்ந்து திடீர் போராட்டம்
ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து குண்டுவெடிப்பில் பலியான போலீஸ் ஏட்டு மகன் புதுவை கடற்கரையில் காந்தி சிலை முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
3. ஓசூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்
ஓசூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
4. மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை
மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கடலாடி அருகே விறகு வியாபாரி வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
கடலாடி அருகே விறகு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.