மாவட்ட செய்திகள்

தங்கையின் காதலனை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் கைது + "||" + Auto driver arrested for killing a boyfriend

தங்கையின் காதலனை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

தங்கையின் காதலனை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
அம்பர்நாத்தில் தங்கை யின் காதலனை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,

தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் பப்பு பக்டி (வயது25). இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஒரு கோவில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி ராகுல் நாம்தேவ் (23) என்ற ஆட்டோ டிரைவர் சிவாஜி நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், போலீசுக்கு தகவல் கொடுத்த ஆட்டோ டிரைவர் ராகுல் நாம்தேவ் தான் அவரை அடித்து கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

ராகுல் நாம்தேவின் 21 வயது தங்கையும், பப்பு பக்டியும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்து ராகுல் நாம்தேவ் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று இதுதொடர்பாக பேசுவதாக கூறி அவர் பப்பு பக்டியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்தார். பின்னர் தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதை ஆட்டோவில் வரும்போது தற்செயலாக பார்த்தாக போலீசுக்கு தகவல் கொடுத்து இருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் ராகுல் நாம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மாநாட்டிற்கு ரூ.50 ஆயிரம் நிதி தருமாறு டெக்ஸ்டைல் அதிபருக்கு மிரட்டல் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது
மாநாட்டிற்கு ரூ.50 ஆயிரம் நிதி தருமாறு கரூர் டெக்ஸ்டைல் அதிபரை மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
2. 3 பெண்களிடம் நகை பறித்த வழிப்பறி கொள்ளையன் கைது
3 பெண்களிடம் நகை பறித்த வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்து 18 பவுன் நகையை மீட்டார்கள்.
3. ஓசூர் காதல் தம்பதி ஆணவ கொலை வழக்கில் பெரியப்பா உள்பட மேலும் 3 பேர் கைது
ஓசூர் காதல் தம்பதி ஆணவ கொலை வழக்கில் பெண்ணின் பெரியப்பா உள்பட மேலும் 3 பேரை கர்நாடக போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
4. காஞ்சீபுரம் அருகே 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது; கடத்த முயன்ற லாரி பறிமுதல்
காஞ்சீபுரம் அருகே 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்த முயன்ற சிமெண்டு மூட்டைகளுடன் கூடிய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
5. பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் 2 பேர் கைது
பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகையையும் மீட்டனர்.