மாவட்ட செய்திகள்

ரூ.15¼ லட்சம் போதைப்பொருளுடன் 3 நைஜீரியர்கள் சிக்கினர் + "||" + With Rs.15 lakhs of drugs 3 Nigerians were trapped

ரூ.15¼ லட்சம் போதைப்பொருளுடன் 3 நைஜீரியர்கள் சிக்கினர்

ரூ.15¼ லட்சம் போதைப்பொருளுடன் 3 நைஜீரியர்கள் சிக்கினர்
மும்பை மால்வாணி பகுதியில் சிலர் போதைப்பொருள் விற்பனை செய்ய வருவதாக மால்வாணி போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது
மும்பை,

போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு வெளிநாட்டு வாலிபர்கள் 3 பேர் சந்தேகத்திற்கிடமாக வந்தனர்.

போலீசார் 3 பேரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த பைகளை வாங்கி சோதனை போட்டனர். இந்த சோதனையின் போது, ஒரு பையில் ‘கோகைன்’ என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 152 கிராம் எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்வு பிலிப்ஸ் காட்வின் (வயது32), சுக்வே மெக்கா டேனியல் (24), மைக்கேல் ஒக்பன்னா கவுசி (22) என்பது தெரியவந்தது.

போலீசார் கைதான 3 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சம் போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்
மும்பையில் வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சத்து 14 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நைஜீரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. சென்னை முழுவதும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை
சென்னை முழுவதும் மாநில போதைப்பொருள் தடுப்பு போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
3. போதைப்பொருள் கலந்த மது கடத்தியவர் கைது போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மற்றொருவர் ஓட்டம்
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கலந்த மது பாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் மது பாட்டில்களுடன் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
4. பாந்திரா டெர்மினசில் ரூ.1¼ லட்சம் போதைப்பொருளுடன் வாலிபர் கைது
மும்பை பாந்திரா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் போதைப் பொருளுடன் நின்று கொண்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
5. இருவேறு சம்பவங்களில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
மும்பையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரெயிலில் கடத்தி செல்வதற்காக டாக்சியில் ரெயில் நிலையத்துக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக டோங்கிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.