மாவட்ட செய்திகள்

கூடுதல் ரெயில்களை இயக்கக்கோரி 9-ந்தேதி உண்ணாவிரதம் + "||" + To drive more trains on demand 9th

கூடுதல் ரெயில்களை இயக்கக்கோரி 9-ந்தேதி உண்ணாவிரதம்

கூடுதல் ரெயில்களை இயக்கக்கோரி 9-ந்தேதி உண்ணாவிரதம்
அருப்புக்கோட்டை வழியாக ரெயில்களை இயக்கக் கோரி வருகிற 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று ரெயில் பயணிப்போர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
அருப்புக்கோட்டை,


வியாழன், ஞாயிறு ஆகிய 2 தினங்களில் மட்டும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கினால் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியபாட்டி பகுதி மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். சென்னை தாம்பரத்தில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு தினசரி ரெயிலாக அறிவிக்கப்பட்ட அந்தியோதயா பகல் நேர ரெயிலை விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொல்லத்தில் இருந்து ராமேசுவரம் வழியாக அருப்புக்கோட்டைக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் வழியாக புதிய வழித்தடம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

இதற்கான நில ஆர்ஜிதம் செய்து பணிகளை விரைவாக முடித்து இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பாக வருகிற 9-ந் தேதிரெயில் பயணிப்போர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக ரெயில் பயணிப்போர் நலச்சங்க தலைவர் மனோகரன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி தற்கொலை
சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்டார்.
2. பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் 2,200 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் 12 இடங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
4. மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி அரும்பார்த்தபுரத்தில் உண்ணாவிரத போராட்டம்
அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மகளிர் குழு பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...