மாவட்ட செய்திகள்

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.98 கோடி நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை + "||" + The government has allocated Rs.98 crore to allocate rain and flood damage in Chikmagalur district

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.98 கோடி நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.98 கோடி நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை
சிக்கமகளூரு மாவட்டத் தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.98 கோடி நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கூறினார்.
சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி சத்யபாமா தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்ததும் சத்யபாமா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத் தில் உள்ள ஏதாவது 25 கிராமங்களில் கிராமசபை கூட்டமும், பொதுமக் களுடன் தங்கி இருந்து அவர்களின் குறைகளையும் கேட்க நான் முடிவு செய்து உள்ளேன்.

சிக்கமகளூரு மாவட்டத் தில் மழை, வெள்ள பாதிப்புகளால் ரூ.98 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக ரூ.98 கோடி நிதி ஒதுக்கும்படி மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

சிக்கமகளூருவில் உள்ள 8 தாலுகாக்களில் 5 தாலுகாக்களில் நல்ல மழை பெய்து உள்ளது. 3 தாலுகாக்களில் மழை பொய்து விட்டது. மழை பொய்த தாலுகாக்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. அங்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிக்கமகளூரு அருகே பில்லனஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து அதிகாரிகள் விற்பனை செய்ததாக எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணையில் அதிகாரிகள் தவறு செய்தது தெரிந்தால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.