மாவட்ட செய்திகள்

இந்து முன்னணி சார்பில்நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 565 விநாயகர் சிலைகள்மாநில பொதுச்செயலாளர் தகவல் + "||" + On behalf of the Hindu Front Nellai and Thoothukudi districts 565 Vinayaka statues

இந்து முன்னணி சார்பில்நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 565 விநாயகர் சிலைகள்மாநில பொதுச்செயலாளர் தகவல்

இந்து முன்னணி சார்பில்நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 565 விநாயகர் சிலைகள்மாநில பொதுச்செயலாளர் தகவல்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பில் 565 விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது என்று மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா கூறினார்.
திசையன்விளை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பில் 565 விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது என்று மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா கூறினார்.

இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து முன்னணி சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்காக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திசையன்விளை அருகே உள்ள கொம்மடி கோட்டையில் நடந்து வருகிறது. மொத்தம் 565 சிலைகள் தயார் செய்யப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக ராஜ விநாயகர், காளை வாகன விநாயகர், சிவன், பார்வதியுடன் அமர்ந்துள்ள விநாயகர், கற்பக விநாயகர், புலி வாகன விநாயகர், எலி வாகன விநாயகர் என்று பல்வேறு வகையான சிலைகள் உருவாகி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் சுந்தரவேல், பா.ஜ.க. தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.