மாவட்ட செய்திகள்

தாமிரபரணி புஷ்கர விழா:ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்ஆலோசனை கூட்டத்தில் முடிவு + "||" + Thamirabarani Pushkara Festival: Special arrangements for holy water bathers in the river

தாமிரபரணி புஷ்கர விழா:ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தாமிரபரணி புஷ்கர விழா:ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு முறப்பநாடு முதல் முக்காணி வரை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர், 

தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு முறப்பநாடு முதல் முக்காணி வரை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தாமிரபரணி புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி தொடங்கி, 22-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளில் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் கோவிந்தராசு தலைமை தாங்கி பேசினார்.

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தீபு (திருச்செந்தூர்), பாலச்சந்திரன் (சாத்தான்குளம்), தாசில்தார் தில்லைப்பாண்டி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியம், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன் ரவி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர்கள் மனோரஞ்சிதம் (திருச்செந்தூர்), ரமேஷ் பாபு (பெருங்குளம்), பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு முதல் முக்காணி வரையிலும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து தர வேண்டும். இது குறித்து அந்தந்த துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அந்தந்த பகுதிகளில் முன்னேற்பாடுகள் செய்வதற்கு தேவையான வசதிகள் குறித்து துறைவாரியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

குளங்களை தூர்வார...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சடையநேரி, கடம்பா மற்றும் அதன் கீழ் உள்ள குளங்களுக்கு தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருவது என்று முடிவு செய்யப்பட்டது.