மாவட்ட செய்திகள்

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை + "||" + A teenager who divorced her husband Suicide by hanging

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
கோவில்பட்டி அருகே திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் பயிற்சி...

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி வடிவு. இவர்களுடைய மகள் முத்துலட்சுமி (வயது 23). இவர் ஆசிரியர் பயிற்சி படித்து உள்ளார். இவருக்கும், தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மாரிமுத்துவுக்கும் (26) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பின்னர் கணவன்–மனைவி 2 பேரும் தர்மபுரியில் வசித்து வந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, கோவில்பட்டியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.

தற்கொலை

நேற்று முன்தினம் இரவில் முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கடனை திருப்பி செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடியால் முந்திரி வியாபாரி தற்கொலை
நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் முந்திரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
2. ஆஸ்பத்திரி-பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன் படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
3. திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
4. திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் விடுதியில் ஷாம்பு குடித்து தற்கொலைக்கு முயன்ற பயிற்சி மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதார துறையினர் விசாரணை
வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.