மாவட்ட செய்திகள்

உடல் கருகிய நிலையில் விவசாயி பிணம் கொலை செய்யப்பட்டாரா? + "||" + Was the farmer killed in the body of the victim?

உடல் கருகிய நிலையில் விவசாயி பிணம் கொலை செய்யப்பட்டாரா?

உடல் கருகிய நிலையில் விவசாயி பிணம் கொலை செய்யப்பட்டாரா?
திருக்கோவிலூர் அருகே உடல் கருகிய நிலையில் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 55), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதேஊரில் உள்ள முத்துவளவன் நகர் காலிமனையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மணலூர்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மமான முறையில் இறந்து கிடந்த தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தங்கவேல் மகன் கணேசன் மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் எனது தந்தையின் சாவில் தனக்கு சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை யாரும் முன்விரோதம் காரணமாக எரித்து கொலை செய்தார்களா? அல்லது வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கணவர் அளித்த ஆட்கொணர்வு மனு: ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை பெண்ணிடம் நீதிபதிகள் விசாரணை
கணவர் அளித்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை பெண்ணிடம் நீதிபதிகள் அதிரடி விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
2. இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: ஓமன் நாட்டில் உள்ள கோவை வாலிபரை பிடிக்க என்.ஐ.ஏ. நடவடிக்கை
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக ஓமன் நாட்டில் தங்கியுள்ள கோவை வாலிபரை பிடிக்க, சர்வதேச போலீஸ் உதவியை என்.ஐ.ஏ. அமைப்பு நாடியுள்ளது.
3. காரைக்குடியில் கிரைண்டர் கல்லை போட்டு தொழிலாளி கொலை; மகள் கைது
காரைக்குடியில் மதுகுடித்து தகராறு செய்த தொழிலாளியை கிரைண்டர் கல்லை போட்டு அவரது மகளே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. மோட்டார் சைக்கிள் விபத்தில் காப்பீடு பெற்றதில் முறைகேடு: போலீஸ் அதிகாரி உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை
மோட்டார் சைக்கிள் விபத்தில் காப்பீடு பெற்றதில் முறைகேட்டில் உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரி உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
5. மாணவி பாலியல் புகார்: ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேளாண்மை உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி முதன்மை நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.