மாவட்ட செய்திகள்

விவசாய சங்கத்தினர் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் + "||" + Agricultural unions demonstrated in the lake

விவசாய சங்கத்தினர் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
திருமானூர் அருகே ஏரியை தூர்வாரக்கோரி விவசாய சங்கத்தினர் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமானூர், 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழக்காவட்டாங்குறிச்சியில் உள்ள பெரிய ஏரி பல வருடங்களாக தூர்வாரப்படாததால் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும், ஏரியின் கரைகளில் உள்ள கருங்கல் சுவர் மற்றும் படிக்கட்டுகள் இடிந்து காணப்படுகின்றன. இதனை சரிசெய்யக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மோசமான நிலையில் உள்ள இந்த ஏரியை தூர்வாரி கரைகளை சரி செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆண்டவர், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏரியை சுத்தம் செய்ய கோரி கோஷமிட்டனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கிராமநிர்வாக அதிகாரி அறிவழகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக ஏரியில் உள்ள முட்புதர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கரைகள் சரி செய்யப்படும் என கூறினர். இதனையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் சுப.உதயகுமார் பங்கேற்பு
சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுப.உதயகுமார் கலந்து கொண்டார்.
2. வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
3. பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. மருத்துவமனை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி அனைத்து பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. பணிவரன்முறை செய்ய வலியுறுத்தி, அடுத்த மாதம் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தர்மபுரியில் கு.பாலசுப்பிரமணியன் தகவல்
ரேஷன்கடை பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.