மாவட்ட செய்திகள்

சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் + "||" + Seek to ban Chinese crackers The AIADMK MLAs cracked down in the assembly premises

சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
புதுவையில் சீன பட்டாசுகளை தடை செய்யக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்துக்குள் பட்டாசு வெடித்தனர்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள கடைகளில் சிறிய ரக பட்டாசுகள் தற்போது பரபரப்பாக விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் தயாரான பட்டாசுகள் என்று கூறப்படும் இந்த பட்டாசுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு பொட்டலம் போன்று காணப்படும் இந்த பட்டாசை தூக்கி தரையில் போட்டாலோ, வீசி எறிந்தாலோ வெடிக்கிறது. மாணவர்கள் பலர் இதை வாங்கி பள்ளிகளிலும் வெடித்து விளையாடி வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய பட்டாசுகளுடன் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சட்டசபைக்கு வந்தனர். சட்டமன்ற வளாகத்தில் தரையில் அந்த பட்டாசுகளை வீசி வெடித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, இத்தகைய சீனாவில் தயாரான இந்தரக பட்டாசுகள் தற்போது மாணவர்கள் கைகளில் தாராளமாக புழங்குகிறது. இவை ஒட்டுமொத்தமாக வீசி வெடிக்கும்போது ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே இந்த பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.வுக்கு எதிராக வரும் 25ந்தேதி அ.தி.மு.க. கண்டன பொது கூட்டம்; முதல் அமைச்சர் அறிவிப்பு
தி.மு.க.வுக்கு எதிராக வருகிற 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொது கூட்டம் நடத்தப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. அண்ணாவுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அ.தி.மு.க. அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு
அண்ணாவுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அ.தி.மு.க.தான் என்று காங்கேயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
4. அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
5. அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம்
சிங்கம்புணரி அருகே அ.தி.மு.கவினர் பிரான்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.