மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் வி‌ஷம் குடித்த மாணவி + "||" + Because of the headmaster Within the school premises A poisoned student

தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் வி‌ஷம் குடித்த மாணவி

தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் வி‌ஷம் குடித்த மாணவி
கோவையில் தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் மாணவி வி‌ஷம் குடித்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை,

கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், 9–ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் இருவரும் பள்ளி வராண்டாவில் நின்று தகராறு செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்கள் இருவரையும் அழைத்து திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் அழுதுகொண்டே வகுப்பறைக்கு சென்று உள்ளனர். அவர்களை சக மாணவிகள் சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவிகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த அந்த 10–ம் வகுப்பு மாணவி, பூச்சி மருந்தையும் (வி‌ஷம்) கொண்டு வந்ததாக தெரிகிறது. அவர், காலை 10.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் வைத்து வி‌ஷ மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள் பள்ளி ஆசிரியைகளிடம் கூறினார்கள்.

உடனே அவர்கள் அந்த மாணவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அந்த மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘வி‌ஷம் குடித்த மாணவி, அந்த வி‌ஷத்தை விழுங்காமல் வாய் பகுதியிலேயே வைத்துள்ளார். இதனால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வில்லை. எனினும் அவருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இதுவரை யாரும் எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
“எச்.ராஜா, கருணாஸ் எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்“ என்று மதுரையில் நேற்று இரவில் அளித்த பேட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு கடைக்கு தனியாக செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் விபரீத முடிவு
பூச்சி மருந்தை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
3. பீகாரில் பள்ளி கூட முதல்வர் கற்பழித்ததில் 5ம் வகுப்பு மாணவி கர்ப்பிணி ஆன அதிர்ச்சி தகவல்
பீகாரில் பள்ளி கூட முதல்வர் கற்பழித்ததில் 5ம் வகுப்பு மாணவி கர்ப்பிணியாகி உள்ளார்.
4. பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
5. பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.