மாவட்ட செய்திகள்

சூலூர் அருகே லாரி மீது பஸ் மோதி தனியார் கல்லூரி பேராசிரியை உடல் நசுங்கி பலி + "||" + The bus on the truck collide Private college kills the professor

சூலூர் அருகே லாரி மீது பஸ் மோதி தனியார் கல்லூரி பேராசிரியை உடல் நசுங்கி பலி

சூலூர் அருகே லாரி மீது பஸ் மோதி தனியார் கல்லூரி பேராசிரியை உடல் நசுங்கி பலி
சூலூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் கல்லூரி உதவி பேராசிரியை உடல் நசுங்கி பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூலூர்,

திருச்சி மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவருடைய மகள் அழகு ஜோதி (வயது 27). இவர் திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வர முடிவு செய்தார். அதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.

அந்த பஸ் அதிகாலை 4 மணிக்கு சூலூர் அருகே வந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு பஸ் அந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் அந்த பஸ்சில் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த அழகுஜோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான் ஜினியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அழகு ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கல்லூரிகளில் கூடுதலான சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கல்லூரிகளில் கூடுதலான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் உத்தரவிட்டார்.
2. திருஉத்தரகோசமங்கை அருகே பரிதாபம்: கபடி விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
திருஉத்தரகோசமங்கை அருகே வெண்குளம் கிராமத்தில் கபடி விளையாடியபோது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்துபோனார்.
3. பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வழியில்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
4. பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு கடைக்கு தனியாக செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் விபரீத முடிவு
பூச்சி மருந்தை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
5. அமெரிக்காவில் கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் படுகாயம்
அமெரிக்காவில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.