மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை - மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை + "||" + 2 years jail penalty if evewari set in farmland - Electrician officer warns

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை - மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை - மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை
விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்,

விவசாய நிலங்களுக்குள் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை தடுக்க சில விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின்வேலி அமைக்கின்றனர். இந்த மின்வேலிகளில் வனவிலங்குகள் மட்டுமின்றி சில நேரங்களில் மனிதர்களும் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதும், மின்சாரம் பாய்ச்சுவதும் கிரிமினல் குற்றமாகும். மின்வேலி அமைத்தால் இந்திய குற்றவியல் சட்டம் படியும், மின்சட்டம் படியும், தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படியும் குற்றம் செய்தவர்கள் 2 வருட ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து அனுபவிக்க நேரிடும்.

ஆகவே மின்நுகர்வோர் மின்சாரத்தை தகாத முறையில் அல்லது தவறான வழிகளில் பயன்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் மின்சார வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு, சட்டவிரோதமாக வேலிகளில் மின்சாரம் பாய்ச்சும் மின்நுகர்வோரே இழப்பீடு தொகை அளிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில் பலத்த மழை: விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின
கூடலூரில் பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
2. காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 2 விவசாயிகள் பலி
ஓசூர் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 2 விவசாயிகள் உடல் கருகி இறந்தனர்.
3. 13 மாவட்டங்களில் அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு
விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் 13 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று திருப்பூரில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டியக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.