மாவட்ட செய்திகள்

ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி + "||" + The building worker who died on Railway Railway

ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி

ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி
குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கட்டிட தொழிலாளி இறந்து கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை, 

குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் காயங்களுடன் நேற்று இறந்துகிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரெயில்வே போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இதுகுறித்து விசாரித்த போது இறந்து கிடந்தவர் குளித்தலை கோட்டமேடு பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் அன்புச்செல்வன்(வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் அவர் திருப்பூரில் கட்டிட வேலை செய்துவந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பூரில் இருந்து குளித்தலைக்கு வந்த இவர், தனது ஊருக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து செல்லும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இண்டூர் பகுதியில், வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
இண்டூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
2. தொழிலாளி தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற மனைவி சிகிச்சை பலனின்றி சாவு
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற மனைவியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
3. ஒரத்தநாடு அருகே மனைவியை, அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில், மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. நாட்டறம்பள்ளி அருகே கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்மச்சாவு போலீசார் விசாரணை
நாட்டறம்பள்ளி அருகே கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை