மாவட்ட செய்திகள்

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகம்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடந்தது + "||" + Tirupur South Taluk Office: Voting machines verification work took place in the presence of all the parties

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகம்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடந்தது

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகம்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடந்தது
திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.
நல்லூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், பல்லடம், அவினாசி, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டன.

அந்தவகையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 5,880 மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் 3,200 உள்ளிட்ட எந்திரங்கள் பல்லடத்திலும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்த நிறுவனத்தின் பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டு முடிவடைந்தது.

திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணியை திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கிவைத்தார். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

இதில் உதவி ஆணையர் (கலால்)வி.சக்திவேலு, தேர்தல் தாசில்தார் ச.முருகதாஸ், தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன், உதவி தேர்தல் அதிகாரி முகமது சபியுல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.