மாவட்ட செய்திகள்

மின்திருட்டில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி பணி இடைநீக்கம் + "||" + Acted favorably to the person who was involved in the power Electricity Officer Suspension at Work

மின்திருட்டில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி பணி இடைநீக்கம்

மின்திருட்டில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி பணி இடைநீக்கம்
மின்திருட்டில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தானே,

தானே மாவட்டம் ஷில் பகுதியை சேர்ந்த மாநில மின்வாரிய அதிகாரி ஆனந்த் ரதோடு. இவர் கடந்த ஜூலை மாதம் ஷில் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 23 ஆயிரத்து 826 யூனிட் அளவிற்கு மின் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு அபராதமாக, அந்த வணிக வளாக உரிமையாளர் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது.

இந்தநிலையில் அதிகாரி ஆனந்த் ரதோடு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வணிகவளாகத்தில் நடந்த மின் திருட்டின் அளவை 4 ஆயிரத்து 376 யூனிட்டாக குறைத்தார். இதனால் வணிக வளாக உரிமையாளர் செலுத்த வேண்டிய அபராதம் ரூ.77 ஆயிரத்து 190 ஆக குறைந்தது.

இந்தநிலையில் மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்த போது அதிகாரி ஆனந்த் ரதோடு வணிகவளாக உரிமையாளருக்கு சாதகமாக ரசீதில் திருத்தங்கள் செய்தது அம்பலமானது. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. துப்புரவு தொழிலாளர்கள் 14 பேர் பணி இடைநீக்கம் : மும்பை மாநகராட்சி நடவடிக்கை
வேலையில் அலட்சியமாக இருந்த துப்புரவு தொழிலாளர்கள் 14 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2. அலட்சியமாக செயல்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
அலட்சியமாக செயல்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
3. மோசடி புகாரில் கட்டப்பஞ்சாயத்து : 6 போலீசார் பணி இடைநீக்கம்
மோசடி புகாரில் கட்டப்பஞ்சாயத்து செய்த 6 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.
4. டவர் வேகன் தடம்புரண்டு விபத்து: ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்
மத்திய ரெயில்வேயின் கசாரா - உம்பேர்மாலி இடையே கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பராமரிப்பு பணிகள் நடந்தது.
5. அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் - மாணவ, மாணவிகள் போராட்டம்
கிருஷ்ணகிரி அருகே பாடம் நடத்தாமல் இருந்த அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை திரும்ப பெற வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.