மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு + "||" + Prize for vehicle riders wearing 'helmet' in Villupuram

விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு

விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு
விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பரிசு வழங்கினர்.
விழுப்புரம், 


சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை விழுப்புரம் மாவட்டத்தில் அமல்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் நகர காவல்துறையும், போக்குவரத்து காவல் துறையும் இணைந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், பாலமுருகன், போலீஸ் நண்பர்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

மேலும் விழுப்புரம் நகரில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் ‘ஹெல்மெட்’ அணிந்தவாறு பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கும் போலீசார், பரிசு பொருளை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
பொதுமக்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. உளுந்தூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்த சம்பவம்: ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் 19 பவுன் நகை பறிப்பு - ‘ஹெல்மெட்’ கொள்ளையர்கள் அட்டூழியம்
உளுந்தூர்பேட்டை பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த கொள்ளையர்கள் மொத்தம் 19 பவுன் நகையை பறித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த இருவேறு சம்பவங்கள் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. ‘ஹெல்மெட்’ அணிவது சாத்தியமா?
அரை மணி நேரம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருக்கும் நிலையில் ஒரு வக்கீல், பொது நிர்வாகம் படித்த தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
4. ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது அனிச்சை செயலாக மாற வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது அனிச்சை செயலாக மாற வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
5. கடந்த 15 நாட்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 50 ஆயிரம் பேர் மீது வழக்கு போலீஸ் கமிஷனர் தகவல்
கடந்த 15 நாட்களில் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 50 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.