மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்)கூட்டணி தொடரும் + "||" + The Congress-Janata Dal (S) coalition will continue in the local bodies

உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்)கூட்டணி தொடரும்

உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்)கூட்டணி தொடரும்
உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,

காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இழுபறி நிலை உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட வேண்டிய நிலை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் ெநருங்கி வருகிறது.

இதனால் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தங்களின் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போது இருந்தே தயாராகும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ஜமீர்அகமதுகான், சிவானந்தபட்டீல், கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.