மாவட்ட செய்திகள்

டெல்லியில் இன்று அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு + "||" + Yeddyurappa in Delhi today's meeting with Shah

டெல்லியில் இன்று அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு

டெல்லியில் இன்று அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் டெல்லியில் நடக்கிறது.
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா இதில் கலந்து கொள்ள  டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தின்போது, இன்று (சனிக்கிழமை) கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம், உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிைடத்த வெற்றி, கூட்டணி ஆட்சியில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து எடியூரப்பா ஆலோசனை நடத்துகிறார்.

அடுத்த ஆண்டு (2019) நடைெபற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் யார் யாருக்கு டிக்கெட் வழங்குவது என்பது குறித்தும் அவர் விவா திக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்னதாகவே கர்நாடகத் தில் பா.ஜனதா தலைமையில் ஆட்சியை ஏற்படுத்த பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.