மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை + "||" + Parameshwar today advised Congress MLAs

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று காங்கிரஸ் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் பரமேஸ்வர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

இதில் கலந்துகொள்ளும்படி காங்கிரசை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் கூட்டணி ஆட்சியை சுமூகமாக நடத்தி செல்வது, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்வது, நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து செயல்படுவது, புதிய மேயரை தேர்ந்தெடுப்பது, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப் படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் - சித்தராமையா
கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று சித்தராமையா கூறினார்.
2. நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் இதுவரை 1,334 கைதிகள் விடுதலை
நன்னடத்தை அடிப் படையில் கர்நாடகத்தில் இதுவரை 1,334 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
3. சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் : பரமேஸ்வர் உத்தரவு
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.
4. மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதில்
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? என்பது குறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதில் அளித்துள்ளார்
5. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதாவினர் பாதயாத்திரை துணை முதல்-மந்திரி குற்றச்சாட்டு
விவசாய கடன் தள்ளுபடி குறித்து பிரதமரை சந்தித்து பேசலாம் என்றும், அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொள்வதாகவும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.