மாவட்ட செய்திகள்

மூளை அறுவைசிகிச்சையின்போது பாடல் பாடிய பெண்! + "||" + During brain surgery The girl sang the song

மூளை அறுவைசிகிச்சையின்போது பாடல் பாடிய பெண்!

மூளை அறுவைசிகிச்சையின்போது பாடல் பாடிய பெண்!
தனக்கு மூளைக்கட்டி அறுவைசிகிச்சை நடந்தபோது பெண் ஒருவர் எந்தப் பதற்றமும் இன்றி பாட்டுப் பாடிக்கொண்டிருந்திருக்கிறார்.
தனது மூளையிலிருந்த கட்டியை அகற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட 9 மணி நேர சிக்கல் மிக்க அறுவைசிகிச்சையின்போது விழித்திருந்த அப்பெண், பாடல்களைப் பாடியதுடன், நகைச்சுவை கதைகளையும் கூறி வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பான காணொளி, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவைச் சேர்ந்த அந்த 35 வயதுப் பெண் சாரா பிலோவே, ஓர் ஆசிரியை, நகைச்சுவைக் கலைஞர். அத்துடன், அவர் ஒரு பயிற்சி பெற்ற பாடகியும் கூட.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாராவுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் அறுவைசிகிச்சையின் மூலம், சாராவுக்கு தெரியாமல் கடந்த 15 ஆண்டுகளாக அவரது மூளையில் வளர்ந்திருந்த கட்டியின் 85 சதவீத பகுதி அகற்றப்பட்டுள்ளது.

எத்தருணத்திலும் பதற்றப்படாமல் எப்படி இருப்பது என்று இப்பெண்ணிடம் கற்றுக்கொள்ளலாம்!