மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன் கைதான வாலிபர் வாக்குமூலம் + "||" + Killed in private company employee in Thoothukudi I was killed by calling it by name

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன் கைதான வாலிபர் வாக்குமூலம்

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன் கைதான வாலிபர் வாக்குமூலம்
‘பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன்‘ என்று தனியார் நிறுவன ஊழியர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி,

‘பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன்‘ என்று தனியார் நிறுவன ஊழியர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர் கொலை

தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் முத்து இருளப்பன் என்ற அஜித்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அஜித்குமார் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

கடந்த 4–ந் தேதி இரவு அந்த பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு ராஜபாண்டிநகர் கெபி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் பாரதி (23), அவரின் நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு இந்த கொலையில் தொடர்புடைய பாரதியின் தந்தை சங்கர், நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி

இந்த நிலையில் நேற்று காலையில் பாரதி, மோகன் ஆகியோர் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான பாரதி போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், நானும் எனது நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோர் ராஜபாண்டிநகர் பகுதியில் சம்பவத்தன்று இரவு மது குடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த அஜித்குமார் என்னை பெயர் சொல்லி அழைத்தார். அதனால் நான் அவருடன் தகராறு செய்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து அஜித்குமாரை குத்தினேன். உயிருக்கு போராடி கொண்டு இருந்த அவனை நான் எனது தந்தை சங்கர், நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டிநகர் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பி சென்று விட்டோம். சென்னைக்கு சென்ற நான் வீட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்காக வந்தேன். அப்போது போலீசார் கைது செய்து விட்டனர் என்று கூறி உள்ளார். அதன் பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை அண்ணன்-அண்ணி கைது
பட்டுக்கோட்டை அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன்-அண்ணியை போலீசார் கைது செய்தனர்.
2. விருதுநகர் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலை: “மகளிடம் அத்துமீறி நடக்க முயன்றதால் தீர்த்துக் கட்டினேன்” கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்
மதுரை அழகர்கோவில் அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
3. மதுரை அருகே ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலையில் கள்ளக்காதலி கைது
மதுரை அருகே அழகர்கோவில் விடுதியில் நடந்த ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கள்ளத்காதலி கைது செய்யப்பட்டார்.
4. கீரனூர் அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது
கீரனூர் அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
5. பவானிசாகர் அருகே பெண் படுகொலை: வேறு ஒரு வாலிபருடன் பழகியதால் கொன்றேன் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பவானிசாகர் அருகே பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு வாலிபருடன் பழகியதால் கொன்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...