மாவட்ட செய்திகள்

வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு + "||" + Quality has been upgraded near Valliyur Higher Secondary School

வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா 
அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 

மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன், விஜிலா சத்யானந்த், இன்பதுரை எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் வேளாண்மை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

விழாவில் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம் (வள்ளியூர்), அந்தோணி அமலராஜா (ராதாபுரம்), வள்ளியூர் நகர செயலாளர் தவசிமுத்து, ராதாபுரம் தாசில்தார் புகாரி, வள்ளியூர் யூனியன் ஆணையாளர் ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிலா உள்பட பலர் கலந்துகொண்டனர். தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஷாஜகான் கபீர் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்பாதைகளை சீரமைக்க 560 பணியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்பாதைகளை சீரமைக்க 560 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
2. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் புதுச்சேரியில் பெரிய அளவில் சேதம் இல்லை - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் புதுச்சேரியில் பெரிய அளவில் சேதம் இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
3. அனைத்து கூட்டுறவு சங்கங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
4. முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்
புயல் பாதுகாப்பு முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
5. இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என பரமக்குடியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.