மாவட்ட செய்திகள்

ரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி + "||" + Trying to selfie on the train College student kills

ரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி

ரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி
ரெயில் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் மீது மின்கம்பி உரசியதால் உடல் கருகி பலியானார்.

கோவை,

நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்த சசிதரன் என்பவருடைய மகன் ஸ்ரீஹரி (வயது 18). இவர் கோவையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். ஸ்ரீஹரி தனது நண்பர்கள் 5 பேருடன் டீ குடிப்பதற்காக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வெளியே சென்றார்.

அவர்கள் பீளமேடு ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது அங்கு கோவையை நோக்கி வந்த சரக்கு ரெயில் சிக்னலுக்காக நின்றுகொண்டு இருந்தது.

ஸ்ரீஹரி அந்த சரக்கு ரெயில் மீது ஏறி செல்பி எடுப்பதற்காக ரெயிலில் இருந்த படிக்கட்டு மீது ஏறினார். அவருடைய நண்பர்கள் வேண்டாம் என்று கூச்சலிட்டும் அதை பொருட்படுத்தாமல் ரெயில் மீது ஏறி நின்று செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.

அப்போது அங்கு மேலே சென்ற உயரழுத்த மின்சார ஒயர் ஸ்ரீஹரியின் தலையில் உரசியதாக தெரிகிறது. உடனே அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த நண்பர்கள் ஸ்ரீஹரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். கோவை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ஸ்ரீஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பி அறுந்து விழுந்ததால் குளத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி
அசாம் மாநிலம் நகவுன் மாவட்டம் காடோவல் என்ற இடத்தில் ஒரு குளம் உள்ளது. அதன் மேலே 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது.
2. பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு கடைக்கு தனியாக செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் விபரீத முடிவு
பூச்சி மருந்தை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
3. டவர் வேகன் தடம்புரண்டு விபத்து: ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்
மத்திய ரெயில்வேயின் கசாரா - உம்பேர்மாலி இடையே கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பராமரிப்பு பணிகள் நடந்தது.
4. ஆட்டோ மீது லாரி மோதல் : 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
நாக்பூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
5. பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கல்லூரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.