மாவட்ட செய்திகள்

கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி குட்டிகளால் பரபரப்பு + "||" + Travel the bear cubs on the road near Kotagiri

கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி குட்டிகளால் பரபரப்பு

கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி குட்டிகளால் பரபரப்பு
கோத்தகிரி அருகே சாலையில் கரடி குட்டிகள் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்கள், பேரிக்காய் தோட்டங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழையும் கரடிகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனர். நேற்று அரவேனுவில் இருந்து கேசலாடா செல்லும் சாலையில் 3 கரடி குட்டிகள் உலா வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் குட்டிகளை தேடி தாய் கரடி வந்து விடுமோ என்ற பீதியில் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு கரடி குட்டிகள் சென்ற பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோத்தகிரி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை கரடி தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் பீதியுடன் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் அந்த கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சோரியாங்குப்பம் பகுதியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; மதுக்கடைகளை அகற்ற இளைஞர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு
சோரியாங்குப்பம் பக்லுதியில் ஆய்வு செய்ய வந்த கவர்னரிடம், இளைஞர்கள் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவி கையை வெட்டிய டிரைவர் ஆரணி அருகே பரபரப்பு
ஆரணி அருகே குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவி கையை டிரைவர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தூத்துக்குடியில் புகார் கொடுக்க வந்தபோது சம்பவம்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. வடகோவை மேம்பாலத்தில் நெருப்பு பலூன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களால் பரபரப்பு
நெருப்பு பலூன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் பீதிஅடைந்தனர்.
5. ‘வாட்ஸ்–அப்’பில் வீடியோ வெளியாகி பரபரப்பு; லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
லஞ்சம் வாங்கியதாக ‘வாட்ஸ்–அப்’பில் வீடியோ வெளியானதையடுத்து கவுந்தப்பாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.