மாவட்ட செய்திகள்

செம்மண் கடத்திய 3 டெம்போ, பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் + "||" + Loamy Abducted 3 tempo, pokeline Machines are confiscated

செம்மண் கடத்திய 3 டெம்போ, பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்

செம்மண் கடத்திய 3 டெம்போ, பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்
கருங்கல், கொல்லங்கோடு பகுதியில் செம்மண் கடத்திய 3 டெம்போ, 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருங்கல்,

கருங்கல் அருகே ஆலஞ்சி பாரியக்கல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டெம்போக்களை நிறுத்தி சோதனையிட்ட போது, அவற்றில் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 2 டெம்போக்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் செம்மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரமும் போலீசாரிடம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட டெம்போக்கள், பொக்லைன் எந்திரம் கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கொல்லங்கோடு ஐத்திக்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, செம்மண் ஏற்றிய நிலையில் புறப்பட தயாராக நின்ற ஒரு டெம்போவையும், ஒரு பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் போதிய ஆவணங்கள் இன்றி செம்மண் அள்ளிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து டெம்போவையும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அவை பத்மநாபபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. விமான கழிவறையில் பதுக்கப்பட்ட ரூ.1½ கோடி தங்க கட்டிகள் மீட்பு
துபாய் விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1½ கோடி கடத்தல் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.
2. பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை
பீகார் மாநிலத்தின் பெகுசரை மாவட்டத்துக்கு உட்பட்ட நாராயணிபூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார்.
3. பெண்களை கடத்தி வருவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கண்டித்து போராட்டம்
இளைஞர்கள் காதலிக்கும் பெண்களை கடத்தி வருவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கண்டித்து போராட்டம் நடந்தது.
4. கஞ்சா கடத்தி செல்ல முயன்ற நாமக்கல் வாலிபர் கைது
காட்பாடியில் இருந்து பஸ் மூலம் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்ற நாமக்கல் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
5. சினிமா பாணியில் சம்பவம்: வாலிபரை காரில் கடத்திச் சென்ற 6 பேர் கும்பல்
வாலிபரை காரில் கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து 3 மணி நேரத்தில் போலீசார் அவரை மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.