மாவட்ட செய்திகள்

விமான கழிவறையில் பதுக்கப்பட்ட ரூ.1½ கோடி தங்க கட்டிகள் மீட்பு + "||" + Rs.1.5 crore gold bars to be seized in airport toilet

விமான கழிவறையில் பதுக்கப்பட்ட ரூ.1½ கோடி தங்க கட்டிகள் மீட்பு

விமான கழிவறையில் பதுக்கப்பட்ட ரூ.1½ கோடி தங்க கட்டிகள் மீட்பு
துபாய் விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1½ கோடி கடத்தல் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து பெங்களூரு செல்லும் விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

ஆனால் தங்கம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது, விமான கழிவறையில் அதிகளவில் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 5 கிலோ 800 கிராம் எடை கொண்ட அந்த 50 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 59 லட்சம் ஆகும்.

அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணி யார் என்பது தெரியவில்லை. தங்கம் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.1½ கோடி மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது
நவிமும்பைக்கு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது பெண்கள் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. லாரியில் ரூ.7 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்: போலீஸ் தேடிய 2 பேர் கைது
கோட்டூர் அருகே லாரியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்த வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. வேலூர் அருகே மண் கடத்திய 7 பேர் கைது
வேலூர் அருகே மணல், மண் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கடத்துவதற்காக குவித்து வைத்திருந்த மணல்-டிராக்டர் பறிமுதல் 6 பேர் மீது வழக்குப்பதிவு
மணிகண்டம் அருகே உள்ள கோரையாற்றுப்பகுதியில் கடத்துவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணல், ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.