மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது + "||" + The company carrying out the Rs 27 crore financial fraud: 2 arrested

நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது

நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது
மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

மும்பையில் உள்ள குயிக் டெக்னாலஜி என்ற நிதி நிறுவனம் தன்னிடம் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தது. இதை நம்பிய பலர் அந்த நிதி நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் பணத்தை முதலீடு செய்து உள்ளனர்.

ஜூலை மாதம் வரை வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் வட்டி தொகையை கொடுத்து உள்ளது. அதன்பின்னர் கொடுக்கவில்லை. இதுபற்றி வாடிக்கையாளர்கள் கேட்ட போது, அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சரியாக பதில் அளிக்க வில்லை.

இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் சாக்கிநாக்கா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த நிதி நிறுவனத்தின் துணை தலைவர் சுமித் கைலாஷ் சர்மா (வயது30), நிர்வாக அதிகாரி சுமைல் கான் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மாதந்தோறும் வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.27 கோடி வரை பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு ராகுல் சக்சேனா என்பவர் தான் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் உள்ள நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி
கோவையில் உள்ள ஒரு நிதி நிறுவனம் அதிக வட்டிதருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
2. இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி; பெண் உள்பட 7 பேர் கைது
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. பீகாரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை
பீகாரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தினை கொள்ளையடித்து சென்றனர்.
4. கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு
கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
5. நூதன முறையில் முதியவரிடம் ரூ.34 ஆயிரம் மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார்
முதியவரிடம் நூதன முறையில் ரூ.34 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...